எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி இண்டர்வியூ.. விண்ணப்பிக்க ரெடியா?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Ad Words Specialist பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Senior Analyst என்ற Designation-யில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி Ads சார்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் 3+ ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பெரிய மற்றும் தொழில் சார்ந்த கிளைண்ட்டுகளில் காம்பளக்ஸ் அட் கேம்பெயினில் திறமையை நிரூபித்து இருக்க வேண்டும்.
Ads features, functionalities பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். இதுதவிர Search, Display, Video, Shopping உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும். கஸ்டமர் தான் பர்ஸ்ட் என்ற மனநிலை இருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, கஸ்டமர் சர்வீஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேம் அனலிட்டிக்கல் திங்கிங் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணி என்பது நைட்ஷிப்ட்டாக இருக்கும். இதனால் அதற்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 1ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது HCL Tech Office, Building H-01B, Phoenix Avance Business Hub, Phase 2, HITEC City, Hyderabad, Telangana 500 081 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இண்டர்வியூவிற்கு செல்வோர் ரெஸ்யூம் மற்றும் ஏதாவது ஒரு அரசு அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். லேப்டாப், பென்டிரைவ் உள்பட பிற எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
