English பேச தெரிந்தால் போதும்.. எச்சிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. செப்டம்பர் 16ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் அசோசியேட் (Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 16ம் தேதி சென்னை அம்பத்தூரில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் நாவலூர் அல்லது சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

எச்சிஎல் சார்பில் Associate பிரிவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும்.

it jobs job

அதேபோல் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டம். உற்று கவனிக்கும் திறமை, டீமாக சேர்ந்து செயல்படும் திறமை இருக்க வேண்டும்

மேலும் கஸ்டமர் கேர் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் மற்றும் பிபிள் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். US Shift(இரவு பணி) முறையில் வேலை செய்ய தயாராக இருகக வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக விண்ணப்பம் செய்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை ஏதாவது வாய்ஸ் அனுபவம் இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூர் அல்லது சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். உடனடியாக அல்லது 15 நாட்களில் பணிக்கு சேர தயாராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் பணி நாட்களாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்படும். அலுவலகத்தில் இருந்து பிக்அப் மற்றும் டிராப்புக்கு Cab வசதி உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் 2 ரெஸ்யூம், அரசு அடையாள அட்டையை கையுடன் எடுத்து செல்ல வேண்டும். .

இந்த பணிக்கான இண்டர்வியூ நாளை மறுநாள் (செப்டம்பர் 16) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8 , Madras Thiruvallur High Road, Ambattur, Chennai 600 058 என்ற முகவரிக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+