நவம்பர் 1ல் சோழிங்கநல்லூரில் இண்டர்வியூ.. சென்னையில் பணி.. எச்சிஎல் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து DevOps (AWS)பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 1ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

hcl-walk-in-drive-for-devops-engineer-role-interview-on-november-1-in-chennai
Photo Credit:

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் AWS DevOps பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு Required skills ஆக DevOps பிரின்சிபிள் மற்றும் சிஐ/சிடி வொர்க் ப்ளோஸ் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். அதேபோல் ஏடபிள்யூஎஸ் சர்வீஸ்களான VPC, EC2, IAM, ECS, EKS, Lambda, S3, Cloudwatch உள்பட பிற விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

அதேபோல் laCக்கான Terraform-ல் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் டாக்கர், கன்டெய்னர் ஆர்கெஸ்ட்டிரேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கான்பிகிரேஷன் மேனேஜ்மென்ட்டுக்கான Ansible-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். லினக்ஸ் மற்றும் ஷெல் ஸ்கிரிப்ட்டிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

அதேபோல் Preferred Qualifications - ஆக சில நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி அல்லது தொடர்புடைய பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் DevOps இன்ஜினியருக்கான ஏடபிள்யூஎஸ் சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். சிகேஏ அல்லது டெராபார்ம் அசோசியேட்ஸ் இருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும்.

பைத்தான்/கோ ஸ்கிரிப்ட்டிங்கில் அனுபவம் கொண்டிருப்பது பிளஸ் பாயிண்ட்டாகும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற முகவரிக்கு ரெஸ்யூமை அனுப்பி வைக்க வேண்டும்.

அதேபோல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ என்பது நவம்பர் 1ம் தேதி சோழிங்கநல்லூர் Sez-ல் நடைபெற உள்ளது. மேலும் விபரங்கள் அறிய செய்தியில் உள்ள இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+