Arrears இருந்தாலும் ஓகே! எச்சிஎல்-லில் காத்திருக்கும் வேலை.. சென்னையில் நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (செப்டம்பர் 29) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 30) ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. அரியர்ஸ் இருப்பவர்களும், டிகிரி முடித்தவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இப்போது Voice Process (Banking Domain) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுபற்றிய முழு விவரங்கள் வருமாறு:

hcl-walk-in-drive-for-freshers-process-associate-role-at-ambattur-and-interview-from-september-29-to

இந்த பணியை விரும்புவோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருப்பவர்களும், கடைசி செமஸ்டர் ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். மாறாக பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. புதிதாக படிப்பை முடித்தவர்கள் இல்லாவிட்டால் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் பணி அனுபவம் இல்லாமல் கூட இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இருப்பினும் சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Interpersonal Skills இருக்க வேண்டும்.

எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட் ஷிப்ட்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் Inbound மற்றும் Outbound கால்ஸில் பேச ரெடியாக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை.

சம்பளம் பற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

வாரத்தில் 5 நாட்கள் பணி நாட்களாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்படும். அலுவலகத்தில் இருந்து பிக்அப் மற்றும் டிராப்புக்கு Cab வசதி வழங்கப்படும். இண்டர்வியூவுக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல வேண்டாம். இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 29 (நாளை) மற்றும் செப்டம்பர் 30 (நாளை மறுநாள்) ஆகிய தினங்களளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+