B.com டூ B.sc வரை.. டிகிரி மட்டும் போதும்! இன்று -நாளை HCL-யில் இண்டர்வியூ.. சென்னையில் வேலை ரெடி
சென்னை: சென்னையில் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு இன்று (டிசம்பர் 17), நாளை (டிசம்பர் 18) என 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூவில் பிகாம், எம்காம், பிபிஏ, எம்பிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து International Banking Semi Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கான இண்டர்வியூவில் பங்கேற்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய முக்கிய விவரம் வருமாறு:
மேற்கூறிய பணிக்கு பணி அனுபவம் எதுவும் வேண்டாம். ஏனென்றால் இது Freshers-களுக்கான பணியாகும். இதனால் இந்த பணியை விரும்புவோர் கல்லூரியில் பிகாம், எம்காம், பிபிஏ, எம்பிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும். பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிடெக், பிஇ, எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு பைனான்ஸ் மற்றும் பேங்கிங் பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும்,எதுவும் தெரிந்திருக்க வேண்டும். ரோட்டேஷனல் ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக நைட்ஷிப்ட்டுக்கு ரெடியாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை, தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அலுவலகத்தில் இருந்து 30 முதல் 35 கிலோமீட்டர் தொலைவுக்கு Cab வசதி உள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 17 (இன்று), டிசம்பர் 18 (நாளை) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த 2 நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இண்டர்வியூ நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL TechETA 3, Sandhya Infocity, OMR, Rajiv Gandhi Salai, near AGS cinemas, Navalur, Chennai, Tamil Nadu 600 130 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூ செல்வோர்அதற்கான ரெஸ்யூம், ஐடி ப்ரூப், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications