எச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஏப்ரல் 12 ம் தேதி பெங்களூரில் இண்டர்வியூ.. சூப்பர் சான்ஸ்
பெங்களூர்: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 12ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த சான்ஸை பயன்படுத்தி கொள்ளலாம்.
நம்நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் நொய்டாவில் அமைந்துள்ளது. இதுதவிர சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ என்பது பெங்களூரில் நடைபெற உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Java J2ee (Java Developers) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு குறிப்பிட்ட பிரிவில் பணி அனுபவம் என்பது இருக்க வேண்டும். அதன்படி Java/J2EE மற்றும் ஜாவா 8 ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றி இருக்க வேண்டும்.
அதேபோல் ஸ்பிரிங்புட் (Springboot), மைக்ரோசர்வீசஸ் (Microservices), ரெஸ்ட் (REST), ஏபிஐ (API) உள்ளிட்டவற்றில் 5 க்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும், பேசிக் எஸ்க்யூஎல் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் யுனிக்ஸ் கமாண்ட்ஸ் பற்றிய அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். திறமை மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. நோட்டீஸ் பிரியட் என்பது 0-45 நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 12ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பெங்களூரில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்பவோர் அன்றைய தினம் jigani, HCL office, Tower 4 Ground floor, Bangalore என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications