HCL ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. அக்டோபர் 24 - 25ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் இயங்கி வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் அக்டோபர் 24, அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Walkin Interview for Mortgage Underwriters என்ற பெயரில் இண்டர்வியூ அறிவிக்கப்பட்டுள்ளது. Australian Mortgage Underwriting டொமைனில் அசோசியேட்/சீனியர் அசோசியேட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு இளநிலை அல்லது முதுநிலை பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் Mortage டொமைன் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றில் Mortgage Underwriting/Quality பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது பிரிட்டன் கடன் சார்ந்த ரெகுலேஷனை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருப்பவது பிளஸ் பாயிண்ட்டாகும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு Core Responsiblities ஆக லோன் அப்ளிகேஷன் அசஸ்மென்ட், கிரெடிட்வொர்த்னஸ் எவேலுவேஷன், இன்கம் வெரிபிகேஷன், ரிஸ்க் அனலிசிஸ், புராபர்ட்டி வேலுயேஷன் ரிவ்யூ உள்ளிட்டவை இருக்கும்.
மேலும் ரிவ்யூவிங் லோன் டூ வேல்யூ ரேஷ்யோ, அப்ரூவல் அல்லது டெக்லிநேஷன் ஆப் லோன்ஸ், மோசடியை கண்டுபிடிப்பது (Fraud Detection) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதமசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 24 மற்றும் அக்டோபர் 25 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Elcot SEZ, Medavakkam High Road, Solinganallur, Chennai Tamil Nadu 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நரப்கள் சென்னையில் நியமனம் செய்யப்ப உள்ளனர்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தினமும் ஷிப்ட் என்பது காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications