அனுபவம் வேண்டாம் + அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. HCL-லில் டிச.,1, டிச.,2ல் இண்டர்வியூ.. சென்னையில் பணி
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 1 (நாளை)மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் வேண்டாம். அதேபோல் அரியர்ஸ் இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது பேங்கிங் டொமைனில் புராசஸ் அசோசியேட் (Process Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு அனுபவம் வேண்டாம்.
ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். முதுநிலை படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அரியர்ஸ் இருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அதேவேளையில் பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்தருக்க வேண்டும். இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதேபோல் இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ்க்கு தயாராக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வாகனத்தில் பிக்-அப் மற்றும் டிராப் வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்து Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 என 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை இண்டர்விூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur, Medavakkam High Road, Sholinganallur - 600 119, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள எச்சிஎல் அலுவகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications