ரூ.6 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் HCL ஐடி நிறுவனம்.. ஜனவரி 25ம் தேதி சென்னையில் இண்டர்வியூ
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது சென்னையில் ஜனவரி 25 ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் உள்ளது. இந்த நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை உள்ளிட்ட இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் அடுத்தடுத்து எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். 10, 12, டிகிரி ஆகிய படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். டிகிரி படிப்பை 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதோடு C++ developers, ABAP Developers, Devops உள்ளிட்டற்றுடன் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை பணி அனுபவம் கெண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது மாறுபடும். இதுபற்றி கடைசிகட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூ என்பது ஜனவரி 25ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் காலையில் HCL Technologies limited, Block 1, Sandhya Infocity/ETA Special Economic Zone, NO:33, Rajiv Gandhi Salai, Navalur 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
அங்கு 6வது மாடியில் டிரெய்னிங் ரூமில் வைத்து இண்டர்வியூ என்பது நடைபெறும். இந்த முகவரிக்கான Next to AGS/Vivara Mall என்பது லேண்ட் மார்க்காக இருக்கிறது. இண்டர்வியூ செல்வோர் பணி தேவையான Updates Resume, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்பட பிற ஆவணங்களுடன் சென்று கணேஷ் என்பவரை தொடர்பு கொள்ளலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக மேற்கூறிய முகவரியில் ஜனவரி 25ம் தேதி இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications