டிசம்பர் 23-24ல் இண்டர்வியூ.. HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி நியமனம்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 23-24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணி தொடர்பான முக்கிய விபரங்கள் வருமாறு:

எச்சிஎல் நிறுவனம் சார்பில் Walkin Interview For Reconciliation Specialist என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் தொடர்புடைய பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Reconciliation of receivable/payables, ரிகன்சில் கார்ப்பரேட், டிரேசரி மற்றும் வங்கி அக்கவுண்ட்ஸ் உள்ளிட்டவை கையாளும் திறன் இருக்க வேண்டும்.
அதேபோல் ஷிப்ட்டில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிட்டன் ரோட்டேஷனல் ஷிப்ட் தான் இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை நாவலூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 23ம் தேதி(நாளை) முதல் டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies Ltd. ETA 1- Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவில் பங்கேற்போர் அப்டேட்டட் ரெஸ்யூம், அரசு வழங்கிய ஏதேனும் ஒரு ஐடி கார்டு உள்ளிட்டவற்றை இண்டர்வியூவுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications