Ms Office தெரியுமா? டிகிரி முடித்தோருக்கு ஜாக்பாட்.. சென்னையில் நாளை இன்டர்வியூ.. அழைக்கும் HCL
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை (ஜனவரி 22) சென்னையில் இன்டர்வியூ நடைபெற உள்ளது. இதில் எம்எஸ் ஆபிஸில் பணியாற்ற தெரிந்த பிகாம், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ படித்தோர் பங்கேற்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல் நிறுவனத்தில் Process Associate பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இன்டர்வியூவில் பிகாம், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ படிப்புகளை 2023, 2024 ம் ஆண்டில் முடித்தவர்கள் பங்கேற்கலாம். ஆர்டர் மேனேஜ்மென்ட் மற்றும் ஆர்டர் டூ கேஷ் பிரிவில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
குறிப்பாக எம்எஸ் ஆபிசில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். அதோடு நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் அனலிட்டிக்கல் மற்றும் ரிப்போர்ட்டிங் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். 24/7 என்ற வகையில் சப்போர்ட் செய்ய தயாராக இருக்க வேண்டும். SAP, Oracle-ல் ஆர்டர் மற்றும் ரிப்போர்ட் ஜெனரேட் செய்ய வேண்டி இருக்கும்.
இந்த இன்டர்வியூவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் பங்கேற்க முடியாது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஜனவரி 22ம் தேதி (நாளை)சென்னையில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இன்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் நாளை காலையில் HCL Technologies SEZ Unit 4(SDB -4/Tower 4) ELCOT Special Economic Zone 602/3, Sholinganallur Village, Sholinganllur Medavakkam High Road, Chennai 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இன்டர்வியூவுக்கு செல்வோர் 3 ரெஸ்யூம் ஹார்ட் காப்பி வைத்திருக்க வேண்டும். அதோடு கல்வி சான்றிதழ் உள்பட இண்டர்வியூவுக்கு தேவையான பிறவற்றை எடுத்து செல்ல வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் பணி நியமனம் செய்யப்படும் அலுவலகம் பற்றியும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இன்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications