ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம்.. சென்னையில் நாளை இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல்-யில் நாளை (செப்டம்பர் 27) இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நாளை சென்னையில் நடைபெற உள்ள இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது ஜாவா ஸ்பிரிங்புட் + ஏடபிள்யூஎஸ் டெவலப்பர் (Java Springboot + AWS Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஸ்கில்செட்டாக ஜாவா ஸ்பிரிங்புட் மற்றும் ஏடபிள்யூஎஸ் டெவலப்பர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4.5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Java-வை எடுத்து கொண்டால் ஓஓபிஎஸ், கலெக்சன், லம்டா எக்ஸ்பிரசன்ஸ், ஸ்ட்ரீம் ஏபிஐ, REST API Development என்றால் ஸ்பிரிங் கோர் மற்றும் ஸ்பிரிங் புட் ஏபிஐ டெவலப்மென்ட் பணி இருக்கும். டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் என்றால் ஆர்டிபிஎம்எஸ் கான்செப்ட்ஸ் மற்றும் எஸ்க்யூஎல், NoSQL டேட்டாபேஸ் உள்ளிட்டவை தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும்.
JPA/Spring Data JPA என்றால் ஓஆர்எம் கான்செப்ட்ஸ், Mapping, CRUD மெத்தட்ஸ், பேஜினேஷன் சார்ட்டிங் உள்ளிட்ட பிற டேட்டா ஜேபிஏ தெரிந்திருக்க வேண்டும். மைக்ரோசர்வீசஸ் டெவலப்மென்ட்டை எடுத்து கொண்டால் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மைக்ரோசர்வீஸ் ஆர்க்கிடெக்ச்சர், தெரிந்திருக்க வேண்டும். பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத் ஆகிய இடங்களில் பணி நியமனம் இருக்கும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 27 (நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCLTech, ETA 1 Navalur Campus, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications