Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோ எக்ஸாம்.. மாதஊதியம் ரூ.50,000.. 8-ம் வகுப்பு முடித்தாலே போதும்.. அழைக்கும் இந்து அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.50,000 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை நிர்வகிக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் உள்ளன.

இந்த கோவில்களை இந்து அறநிலையத்துறை ஆணையர், சார்நிலை அலுவலர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

தருமபுரி இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அலுவலகத்துடன் உள்ள ஆய்வாளர்கள், சிறப்பு வட்டாச்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 7 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

 கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?

கல்வி தகுதி - வயது வரம்பு என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பின்படி விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 34 வயதும் நிரம்பி இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பம் செய்யலாம்.

 மாத சம்பளம் என்ன?

மாத சம்பளம் என்ன?

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.15,700 வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும். இந்த பணி என்பது தற்காலிகமானது தான். பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு கிடையாது. நேர்முகத்தேர்வு மட்டுமே உண்டு. இதனால் விண்ணப்பம் செய்வோர் எளிதாக பணியை பெற முடியும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 11ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை www.hrce.tn.gov.in இணையதளத்தில் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் பெயர், முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட விபரங்களை சரியாக குறிப்பிட வேண்டும்.

சான்றிதழ்கள் என்னென்ன?

சான்றிதழ்கள் என்னென்ன?

மேலும், 8 ம் வகுப்பு தேர்ச்சி சான்று, பள்ளி மாற்று சான்று சாதி சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களை இணைத்து ரூ.25 தபால் தலை ஒட்டி விண்ணப்ப படிவமாக அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை ‛‛ உதவி ஆணையர்‌, இந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர்‌ திருமணம்‌ மண்டப வளாகம்‌, பென்னாகரம்‌ ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம்‌ - 636 701'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு காணவும், விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்யவும் Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+