மாத ஊதியம் ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம்.. அழைக்கும் மத்திய அரசு பணி.. விண்ணப்பிப்பது எப்படி?
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரையிலான பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் என்பது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Mining பிரிவில் 39, Survey பிரிவில் 2, Geology, Concentrator பிரிவுகளில் தலா 6, எலக்ட்ரீக்கல் பிரிவில் 11, சிவில் பிரிவில் 5, மெக்கானிக்கல் பிரிவில் 12, Instrumentation பிரிவில் 2, System பிரிவில் ஒன்று என மொத்தம் 84 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்விதகுதி என்ன?
Mining பிரிவில் பணி செய்ய விரும்புவோர் மைனிங் என்ஜினியரீங் படித்திருக்க வேண்டும். சர்வே பிரிவில் பணி செய்ய விரும்புவோர் சிவில் அல்லது M.Tech (Geomatics) படித்திருக்க வேண்டும். Geology பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர் Geology முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். சிவில் பிரிவில் சிவில் என்ஜினியரீங் படிப்பும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு எலக்ட்ரிக்கல் என்ஜினியரீங் படிப்பையம் மெக்கானில் பிரிவுக்கு மெக்கானிக்கல் அல்லது மைனிங் மெசினரி என்ஜினியரீங் படிப்பையும், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுக்கு என்ஜினியரீங் பிரிவில் இன்ஸ்ட்ருமென்ட்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிக்கேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் படிப்பையும், சிஸ்டம் பிரிவுக்கு என்ஜினியரீங் அல்லது எம்பிஏ, எம்சிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.09.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.

மாத சம்பளம் எவ்வளவு?
மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.40 லட்சம் வரையும் கிடைக்கும். விண்ணப்பம் செய்ய 31.10.2022 (அக்டோபர் 31) கடைசிநாளாகும். பொது, ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் கேட் ஸ்கோர் மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் காணலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here செய்யவும். அதோடு ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் Click Here கிளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.












Click it and Unblock the Notifications