"மதுரையில் Hybrid முறையில் பணி’’.. அழைக்கும் பிரபல நிறுவனம் HireX.. யாருக்கெல்லாம் வாய்ப்பு
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் HireX எனும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வேலை செய்யலாம்.
தமிழ்நாட்டில் சென்னையில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் பிற நிறுவனங்களிலும் ஐடி உள்பட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் மதுரையில் HireX எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் ஐடி, ஹெல்த்கேர், உற்பத்தி, சில்லரை, ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் HireX நிறுவனத்தில் Senior Content Writer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளநிலை பிரிவில் ஆங்கிலம், ஜார்னலிசம், கம்யூனிகேசன் அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். வெப் கன்டென்ட் ரைட்டிங், கன்டென்ட் ஸ்ட்ராடஜி, ரீசர்ஜ் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் கன்டென்ட் ரைட்டிங் பிரிவில் புதிய ஐடியாக்களை கொண்டு வரும் வகையில்‛கிரியேட்டிவ் மைண்ட் செட்' இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ரெக்ரூட்டிங் பிரிவில் முன்அனுபவம் இருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாக அமையும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ‛Hybrid' நடைமுறை உள்ளது. இதனால் வாரத்தில் அனைத்து நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சில நாட்கள் வீட்டில் இருந்தே பணி செய்யவும் இந்த நிறுவனம் வாய்ப்பு வழங்க உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பத்துக்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications