‛Hybrid’ முறையில் வேலை.. டிகிரி மட்டுமே போதும்.. HireX தரும் செம வாய்ப்பு.. மதுரையிலேயே பணி!
மதுரை: ஐடி உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வழங்கி வரும் HireX எனும் நிறுவனத்தில் மதுரையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வேலை செய்யலாம்.
HireX.. மதுரையில் செயல்பட்டு வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் என்பது பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வழங்கி வருகிறது. அதாவது ஐடி, ஹெல்த்கேர், உற்பத்தி, சில்லரை, ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை இன்டர்வியூ மூலம் தேர்வு செய்வது தான் இந்த நிறுவனமாகும்.

இந்நிலையில் தான் HireX நிறுவனத்தில் Senior Human Resources Recruiter என்ற பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்? மாதசம்பளம் எவ்வளவு? என்பது பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ரெக்ரூட்டிங் பிரிவில் முன்அனுபவம் கொண்டிருக்க வேண்டம். ரெக்ரூட்டிங் பற்றி நன்கு அறிந்து இன்டஸ்ட்ரி பற்றிய டிரெண்டுகளை அறிந்து வைத்திருக்க வேண்டம். அப்ளிகேஷன் டிராக்கிங் சிஸ்டம்ஸ் மற்றும் ரெக்ரூட்டிங் டூல்ஸ் பயன்படுத்திய அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் பிற நிறுவனங்கள் மற்றும் விண்ணப்பம் செய்வோரிடம் பண்பாக பேசும் திறமை இருக்க வேண்டும். தனியாளாகவும் பணியை சரியாக செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஹியூமன் ரிசோர்ஸ் மற்றும் அதுசார்ந்த பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பிஎச்ஆர் (PHR) எஸ்எச்ஆர்எம் (SHRM), சிபி (CP) உள்ளிட்டவற்றில் சான்றிதழ் பெற்றிருந்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அது பிளஸ் பாயிண்டாக இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்? மாதசம்பளம் எவ்வளவு? என்பது பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி பணிக்கு விண்ணப்பம் செயவ்தற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
அதுமட்டுமின்றி பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த நிறுவனத்தில் ‛Hybrid' நடைமுறை உள்ளது. இதனால் வாரத்தில் அனைத்து நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சில நாட்கள் வீட்டில் இருந்தே பணி செய்யவும் இந்த நிறுவனம் வாய்ப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications