குரூப் 2, குரூப்2 ஏ தேர்வர்களே .. டிஎன்பிஎஸ்சி நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு எப்படி இருக்கும்?
சென்னை: குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்களுக்கு ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். தற்போதைய நிலையில் ஒரு பணியிடத்திற்கு 2.5 நபர்கள் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது. இதன்படி சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட பணிகளில் வரும் நேர்முகத் தேர்வுடன் கூடிய 116 குரூப்-2 பதவிகளிலும், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட நேர்முகத் தேர்வு அல்லாத 5 ஆயிரத்து 413 குரூப்-2ஏ பதவிகளுககும் அறிவிப்பு வெளியானது.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப்-2 பதவிகளில் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 413 இடங்களுக்கும் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் முதல்நிலைத் தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றி பெற்ற 57 ஆயிரத்து 641 பேர் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுத அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 51 ஆயிரத்து 987 பேர் முதன்மைத் தேர்வை கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 25-ந் தேதி எழுதி இருந்தார்கள்.
முதன்மைத் தேர்வு எழுதிய தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு நீண்ட தாமதத்திற்கு பிறகு நிறைவு பெற்றது. இதனிடையே குரூப்-2, 2ஏ பதவிகளில் சில பணியிடங்கள் சேர்த்தும், சில இடங்களை குறைத்தும் டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, குரூப்-2 பதவிகளில் 161 இடங்களும், 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 990 இடங்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவு நேற்று வெளியானது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்தவகையில் நேர்முகத் தேர்வுக்கு 483 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதாவது 161 இடங்களுக்கு 483 பேர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்படி பார்க்கையில் குரூப்-2 பதவிகளுக்கான ஒரு இடத்துக்கு 3 பேர் போட்டியில் உள்ளார்கள். தற்போது வெற்றி பெற்றுள்ளவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன விதிகள், நிபந்தனைகள் அடிப்படையில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிகிறது.
இதேபோல், 5 ஆயிரத்து 990 இடங்களுக்கான குரூப்-2ஏ பதவிகளுக்கும்தேர்வு முடிவு நேற்று வெளியானது, அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து முதன்மைத் தேர்வை எழுதியவர்களில் அடுத்தகட்டமாக கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் யார்? என்ற விவரம் அவர்களின் பதிவெண்ணை பதிவிடும்போது அறியலாம்.. அதன்படி 14 ஆயிரத்து 975 பேர் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதனிடையே குரூப்-2 நேர்முகத் தேர்வு பணிகள் முடிவடைந்த பின்னரே குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் டிஎன்பிஎஸ்சிஇணையதளத்தில் நேர்முகச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்பட உள்ளது.இதில் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று பட்டியலில் இடம்பெற்றுள்ள 483 பேரில், தேர்வாணையத்தின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகுதிகளை பெற்றிருந்தால், நேர்முகத் தேர்வு அல்லாத குரூப்-2ஏ பதவிகளுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதனிடையே குருப் 2 நேர்கானல் அல்லாத பணியிடங்கள் - ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து இளையசாமி அகடாமியின் இளையசாமி முருகன் வெளியிட்ட பதிவினை இபபோது பார்ப்போம். "தற்போது ஒரு பணியிடத்திற்கு 2.5 நபர்கள் ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதாவது சான்றிதழ் சரிபார்ப்புக்கான பரிசீலனை மண்டலத்தை அடைந்தவர்கள் (Reached the zone of consideration for Onscreen Certificate Verification ) தாங்கள் ஏற்கன்வே முதன்மைத் தேர்வெழுதும் போது பதிவேற்றம் செய்த சான்றிதழ்களை பரிசீலனை செய்வார்கள் அப்போது ஏதேனும் சான்றிதழ் தேவைப்பட்டால் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ( உதாரணம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் விடுபட்டிருந்தால்) அதை ஈ சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் 15 நாள் கால அவகாசம் தரப்படும்.

இதன் பின்னர் குருப் 2 நேர்காணல் பணியிடங்களுக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர். யாரெல்லாம் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பரிசீலனை மண்டலத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் தாங்கள் பெற்ற மதிப்பெண் மட்டும் தரவரிசைப் பட்டியல் தெரியப்படுத்தப்படும். இந்த நிலையில் தரவரிசையை அடிப்படையாக வைத்து பணி வாய்ப்பு உறுதியாக கிடைக்குமா? இல்லையா? என்பதை தெளிவாகக் கூறமுடியும்.
கூடுமானவரை நேர்கானல் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் , நேர்கானலுக்கான கலந்தாய்வு பிப்ரவரி மாதத்தின் 3 வது வாரத்திலும் இருக்கும். எனவே பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தான் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பரிசீலனை மண்டலத்தை அடைந்தவர்கள் (Reached the zone of consideration for Onscreen Certificate Verification) தங்களுக்கான பணிவாய்ப்பு என்ன என்பதை துல்லியமாக அறிய முடியும். 51 ஆயிரம் நபர்களில் 36 ஆயிரம் நபர்கள் அடுத்த வேலையைப் பார்க்கலாம்.மீத்ம் இருக்ககூடியவர்கள் பிப்ரவரி மாத இறுதி வரை அழுத்தத்தில் இருக்கக் கூடும். டி என் பி எஸ் சி கனிவு கூர்ந்து இதை வேகமாக முடித்தால் நன்றாக இருக்கும்." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications