HPCL Job: மத்திய அரசு நிறுவனத்தில் 25,000 சம்பளத்தில் வேலை.. 612 பணியிடங்கள்.. பிஇ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 612 பட்டதாரி பயிற்சிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை 25 ஆயிரம் மாதம் வழங்கப்படும்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL). தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்காலம்.

பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 612 பட்டதாரி பயிற்சிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மகாராஷ்டிராவில் 114, ஆந்திரப் பிரதேசத்தில் 62, கர்நாடகாவில் 44, தமிழ்நாட்டில் 35 எனப் பல மாநிலங்களுக்குப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
பி.இ, பிடெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் போன்ற பிரிவுகளில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பொது மற்றும் OBC-NC பிரிவினர் தகுதித் தேர்வில் குறைந்தது 60% மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். SC/ST/PwBD பிரிவினருக்கு 50% மொத்த மதிப்பெண்கள் போதுமானது. ஏப்ரல் 1, 2023 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டுமே இந்த அப்ரென்டிஸ் பயிற்சிக்குத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
மார்ச் 2, 2026 நிலவரப்படி, பொதுப்பிரிவு (UR) விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். PwBD பிரிவினருக்கு அவர்களின் வகையைப் பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு கொள்கைப்படியும் குறிப்பிடத்தக்க வயது வரம்பு சலுகைகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு
பட்டதாரி பயிற்சிப் பொறியாளர் பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ₹25,000 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை
மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு நடைபெற்று, தேர்வானவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இந்த அப்ரென்டிஸ் பயிற்சி ஒரு வருட கால அளவைக் கொண்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னதாக, உரிய அழைப்புக் கடிதம் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் HPCL இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.hindustanpetroleum.com/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 16, 2026 அன்று தொடங்கி, மார்ச் 2, 2026 அன்று நிறைவடையும். விண்ணப்பிக்கத் தொடங்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்துத் தகுதி நிபந்தனைகளையும் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.hindustanpetroleum.com/documents/pdf/Engagement_of_HPCL_Graduate_Apprentice_Trainees_2025-26_Advt_English.pdf


Click it and Unblock the Notifications
