மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. மாதம் ரூ.56 ஆயிரம் வரை சம்பளம்.. ரெடியா
சென்னை: தெற்கு ராணுவ கமாண்ட் பிரிவில் காலியாக உள்ள சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தெற்கு ராணுவ கமாண்ட் ( HQ Southern Command) பிரிவில் காலியாக உள்ள எம்.டி.எஸ், சமையலர் உள்ளிட்ட 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான தகுதிகள் என்ன என்ற விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்; எம்.டிஎஸ் (மேசேஞ்சர்) 13 பணியிடங்கள், எம்.டி.எஸ் (Daftary) 03 பணியிடங்கள், சமையலர் 02 பணியிடங்கள், வாஷர்மேன் 02 பணியிடங்கள், மஸ்தூர் 03 பணியிடங்கள் எம்.டி.எஸ் (தோட்ட பரமாரிப்பாளர்) 01 பணியிடம் என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
கல்வி தகுதி என்ன?: எம்.எடி.எஸ் (மெசேஞ்சர்) மற்றும் எம்.டி.எஸ் ( (Daftary) பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய உணவு வகைகளை சமைக்க தெரிந்து இருக்க வேண்டும். Washerman பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். இது குறித்த விரிவான விவரங்கள் தேர்வு அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளது.
வயது வரம்பு: 18 வயது நிரம்பியர்களும் 25 வயது மிகாதவர்களும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை லெவல் 7 சிபிசி பிரிவின் படி (ரூ.18,000- 56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2023 ஆகும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டும் என்றாலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். தேர்வு நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு குறித்த அறிவிப்பாணையை தெரிந்து கொள்ள https://www.hqscrecruitment.in/Advertisement/Add.pdf என்ற இணையதளத்தை தெரிந்து கொள்ளலாம்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications