வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. IBM தரும் சூப்பர் வேலை.. 2026ல் படிப்பை முடிப்போருக்கும் சான்ஸ்
சென்னை: பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் சார்பில் அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்பட 19 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வீட்டில் இருந்தும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் (IBM) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

ஐபிஎம் நிறுவனத்தில் தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Entry Level பணியாகும்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 2026ம் ஆண்டு படிப்பை முடிப்பவர்களும் அப்ளை செய்யலாம். பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனை சார்ந்த துணை படிப்புகள் முடித்தவர்களும் விண்ணபப்ம் செய்யலாம். 6 சிஜிபிஏ/60% வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு புரோகிராமிங் லேங்குவேஜ்களான Java, C++, Python, Node.Js உள்ளிட்டவை தெரிிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதேபோல் இதுதவிர பெங்களூர், மைசூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, கொச்சி, புவனேஸ்வர், டெல்லி, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா, குர்கிராம், நொய்டா, விசாகப்பட்டினம்,நவி மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இது ஒரு Hybrid வகை பணியாகும். இதனால் வாரத்தில் சில நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications