வங்கியில் வேலை பார்க்க ஆசையா.. 10,277 கிளார்க் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
சென்னை: ஐபிபிஎஸ் கிளர்க் வங்கி பணி (IBPS Clerk Bank job): நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் என பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 60 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த ஒன்றாம் தேதி ஐபிபிஎஸ் 10,277 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கி, கனரா வங்கி என நாடு முழுக்க உள்ள பொதுத்துறை வங்கிகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் (கிளர்க்) - 10,277 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 897 பணியிடங்கள் உள்ளன. ஆந்திராவில் 367, கர்நாடகா - 1,170, கேரளா - 330, புதுவை - 19, தெலுங்கான 261 என மொத்தம் 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி, வயது வரம்பு:
பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்கள் முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். 21.08.2025 அன்று தேதிப்படி கணக்கெடுக்கப்படும். அதாவது, 02.08.1997-க்கு முன்போ, 01.08.2005-க்கு பிறகோ பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது.
அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
முதன்மை தேர்வு (கொள்குறி வகை), மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில் / கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மெயின்ஸ் தேர்வானது சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக்கட்டணத்தை பொறுத்தவரை பொதுப்பிரிவு, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.850 ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.175 ஆகும். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர் மாதம். தேர்வு முடிவு வெளியாகும் நாள் நவம்பர் ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications