Bank job alert: மிக பெரிய வங்கி வேலைவாய்ப்பு.. IBPS -இன் அட்டகாசமான அறிவிப்பு.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் 11 வெவ்வேறு அரசு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் எஸ்பிஐ தவிர இதர அரசு வங்கிகளில் உள்ள காலியிடங்கள் IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள PROBATIONARY OFFICERS பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுமார் 11 வங்கிகளில் காலியாக உள்ள 4135 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

11 வங்கிகள்

11 வங்கிகள்

ஐபிபிஎஸ் நடத்தும் இந்தத் தேர்வில் மொத்தம் 11 வங்கிகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்டரல் பேங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, UCO வங்கி , யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதி என்ன

கல்வித் தகுதி என்ன

மொத்த காலியிடங்கள் - 4135

பணி - Probationary Officer

பணி இடம் - நாடு முழுவதும்

கல்வித் தகுதி: எதாவது ஒரு பிரிவில் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Array

Array

எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 ஆ
ண்டுகள், எம்பிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யும் முறை - 3 தேர்வுகள் (முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு)

விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ. 175/ மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.850/-

ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

முக்கிய தேதிகள்

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று (20/10/2021) முதல் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி 10/11/2021


விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் தேதிகள் - 20.10.2021 to 10.11.2021

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் 04.12.2021 மற்றும் 11.12.2021

முதல்நிலை தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்படும். அதன் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் நேர்காணல் நடத்தப்படும்.

இது குறித்துக் கூடுதல் விவரங்களை https://www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf

விண்ணப்பிக்க https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் இருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+