அரசு வங்கிகளில் வேலை வேண்டுமா? நாளை மறுநாள் தான் கடைசி தேதி.. எப்படி அப்ளை பண்ணணும் தெரியுமா
சென்னை: நாட்டில் உள்ள 11 வெவ்வேறு அரசு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் எஸ்பிஐ தவிர மற்ற அரசு வங்கிகளில் உள்ள காலியிடங்கள் IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள Specialist officers பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 வங்கிகளில் காலியாக உள்ள 1823 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

11 வங்கிகள்
பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்டரல் பேங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, UCO வங்கி , யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதி என்ன
மொத்த காலியிடங்கள் - 1823
I.T Officer - 220 காலியிடங்கள்
Agricultural Officer - 884 காலியிடங்கள்
Rajbasha Adhikari - 84 காலியிடங்கள்
Law Officer - 44 காலியிடங்கள்
HP/Personnel Officer - 61 காலியிடங்கள்
Marketing Officer - 535 காலியிடங்கள்
பணி இடம் - நாடு முழுவதும்
கல்வித் தகுதி: ஒவ்வொரு காலியிடத்திற்கும் சம்பந்தப்பட்ட பிரிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்
வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Array
எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 ஆண்டுகள், எம்பிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யும் முறை - 3 தேர்வுகள் (முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு)
விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ. 175/ மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.850/-
ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்
இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை மறுநாள் (நவ. 23) வரை விண்ணப்பிக்கலாம்.
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் - 26.12.2021
முதன்மை தேர்வு நடைபெறும் நாள் - 30.1.2021
இரண்டு எழுத்துத் தேர்வுகளுக்கு பின்னர் நேர்காணல் நடத்தப்படும்.
இது குறித்துக் கூடுதல் விவரங்களை https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRPSPLXI.pdf
விண்ணப்பிக்க https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் இருந்து மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications