சென்னை ஐசிஎஃபில் வேலைவாய்ப்பு.. 1,010 பணியிடங்கள்.. ஐடிஐ, 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் (ICF) ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை நிறுவனமான ரயில்வேக்கு சொந்தமான ஐசிஎஃபில், 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஐடிஐ, 10 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.

சென்னை பெரம்பூரில் ஐசிஎப் (ICF) எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், ரயில் பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றாக உள்ளது.

icf-chennai-recruitment-2025-apply-now-for-1010-apprentice-vacancies

பொதுத்துறை நிறுவனமான ஐசிஎப்பில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐசிஎப் தொழிற்சாலையில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்;

தச்சர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்ளிட பிரிவுகளில் பயிற்சி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஐடிஐ முடித்தவர்கள், 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கான பயிற்சி பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 1,010 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஃபிரஷர் கேட்டகிரியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். ஐடிஐ கேட்டகிரியில் விண்ணப்பிப்பவர்கள் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தேர்வர்கள் உறுதி செய்து கொள்ளலாம்

வயது வரம்பு:

ஐடிஐ விண்ணப்பதாரர்கள் 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். 24 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். ஐடிஐ அல்லாத பணியிடங்களுக்கு 15 வயது நிரம்பியவர்களும் 22 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடத்திற்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணிக்கு ரூ.7,000 சம்பளமும் , ஐடிஐ பணியிடத்திற்கு மாதம் ரூ.7,000 சம்பளமாக வழங்கப்படும். ஓராண்டு ஒப்பந்த முறையில் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படும்.

தேர்வு முறை:

மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.

(https://pb.icf.gov.in/act2025/) என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்; 11.08.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://pb.icf.gov.in/act2025/Act_App_2025_Notification.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+