ரூ.1.12 லட்சம் சம்பளம்! டிகிரி, டிப்ளமோ, என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு! என்ஐசிஇடியில் வேலை
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காலரா மற்றும் குடல்நோய் சார்ந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்கள் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையிலான சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் காலரா மற்றும் குடல் நோய் (National Institute of Cholera and Enteric Diseases அல்லது NICED) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: கொல்கத்தாவில் உள்ள காலரா மற்றும் குடல் நோய் நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 28 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இளங்கலை பிரிவில் டிகிரி முடித்தவர்கள், டிப்ளமோ, என்ஜினியரிங் படித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இளங்கலை பட்டப்படிப்பை பொறுத்தமட்டில் விலங்கியல், மாலிகுலர் பயோலாஜி பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலாஜி, வைரலாஜி, இம்மினோலாஜி, பயோ டெக்னாலஜி, சைக்காலஜி, தாவரவியல், சோசியல் வொர்க், சோசியாலஜி, நர்சிங், வெட்னரி சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
டிப்ளமோ படிப்பு என்றால் மெடிக்கல் லேபாரேட்டரி டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மேலும் என்ஜினியரிங் பிரிவில் இன்ஸ்ட்ரூமென்டெஷன், சிவில், எலக்ட்ரிக்கல், ஐடி படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.icmr.gov.in மற்றும் www.niced.org.in இணையதளங்களுக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கடைசி நாளாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications