2,100 காலியிடங்கள்.. டிகிரி போதும்.. கைநிறைய சம்பளம்.. ஐடிபிஐ வங்கியில் சூப்பர் வேலை!
சென்னை: கைநிறைய சம்பளத்தில் ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 2,100 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
வங்கியில் பணி செய்வது பலருக்கும் கனவாக உள்ளது. அந்த வகையில் IDBI எனும் (Industrial Development Bank Of India) வங்கியில் 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் உதவி மேலாளர் (Junior Assistant Manager - JAM) பணிக்கு 800 பேர், எக்ஸிகியூட்டிவ் (சேல்ஸ் மற்றும் ஆபரேஷன்) பணிக்கு 1,300 பேர் என மொத்தம் 2,100 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 20 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினர் என்றால் 10 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.11.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாதசம்பளம்: ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் (ஜேஏஎம்) பணிக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சத்து 14 ஆயிரம் முதல் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும். எக்ஸிக்கியூட்டிவ் (சேல்ஸ் மற்றும் ஆபரேஷன்) பணிக்கு மாதம் ரூ.29 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: ஜூனியர் உதவி மேலாளர் (ஜேஏஎம்) மற்றும் எக்ஸிக்கியூட்டிவ் (சேல்ஸ் அன்ட் ஆபரேஷன்) பணிகளுக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் idbibank.in எனும் இணையதளம் மூலம் டிசம்பர் 6ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர் என்றால் ரூ.200 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, நேர்க்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications