ஐடிபிஐ வங்கியில் குவிந்திருக்கும் வேலை! டிகிரி முடித்தால் போதும் ரூ.36 ஆயிரம் சம்பளம்! முழுவிபரம்
டெல்லி: ஐடிபிஐ வங்கியில் ஏராளமான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாத சம்பளம் ரூ.36 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய ஜூன் 17 கடைசிநாளாகும்.
Industrial Development Bank Of India Limited என்பதன் சுருக்கமே ஐடிபிஐ(IDBI) வங்கி என்கிறோம். இந்த வங்கியில் எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் என மொத்தம் 1,544 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

எந்தெந்த பணியிடங்கள்
ஐடிபிஐ வங்கியில் மொத்தம் 1,544 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 1044 இடங்கள் எக்ஸிகியூட்டவ் (அதிகாரி)பணியிடங்களாகும். இந்த பணியில் சேர விரும்புவர்கள் 01.04.2022ன் படி குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மீதமுள்ள 500 இடங்கள் Assistant Manager பணியிடங்களாகும். இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் 01.04.2022ம் தேதிப்படி குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சமாக 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.36 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு www.idbibank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100, எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலம் நடக்கும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்ய ஜூன் மாதம் 17 ம் தேதி கடைசிநாளாகும்.

ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பம்
மேலும் எக்ஸிகியூட்டிவ் அல்லது துணை மேலாளர் ஆகிய பணியில் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அது திருப்பி தரப்பட மாட்டாது என்றும் ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பணி நியமன முறைகளில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications