Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண்கள்.. வேலைவாய்ப்புகளை தட்டித்தூக்கும் மகளிர்.. புதிய சாதனை - டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் நாட்டில் முதல் முறையாக ஆண்களை விட பெண்கள் வேலைவாய்ப்பு துறையில் முன்னேற்றமடைந்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் தனித்திறமையுடன் பல்வேறு வேலைகளுக்கு தயாராக இருப்பதாகவும், புதிய வேலைகளை பெண்கள் தட்டித்தூக்குவதாகவும் புதிய டேட்டா வெளியாகி உள்ளது.

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் நம் நாட்டை சேர்ந்த ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர். இப்படியான சூழலில் நம் நாட்டின் வேலைவாய்ப்பு, ஆண், பெண்களின் திறமை எப்படி உள்ளது? எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

in-our-country-women-surpass-men-in-job-readiness-for-first-time-says-india-skills-report-2026
Photo Credit:

நம் நாட்டின் கல்வி டெஸ்ட்டிங் சேவை (Education Testing Service or ETS) சார்பில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU) ஆகியவற்றுடன் இணைந்து 13வது இந்திய திறன் அறிக்கை 2026 (India Skill Report 2026) வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முக்கியமான 7 துறைகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேலானவர்கள், 1000 அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட டேட்டாக்களின் அடிப்படையில்இது உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛இந்தியர்களின் திறமை என்பது வெளிநாட்டினரால் மதிக்கப்படுகிறது. இந்திய திறமையாளர்கள் வெளிநாடுகளில் பணி செய்ய அழைக்கப்படுகின்றனர். இது உலகளவில் தொழிலாளர் சந்தையில் இந்தியர்களின் வளர்ந்து வரும் செல்வாக்கை காட்டுகிறது.

மேலும் உலகளவில் ஏஐ திறமைசாலிகளில் 16 சதவீதத்தை கொண்டுள்ளது. இது 2027 ம் ஆண்டுக்குள் 1.25 மில்லியன்(12.50 லட்சம்) நிபுணர்களை தொட வாய்ப்புள்ளது. ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்துவதில் இந்தியாவில் உலகளவில் முன்னணியில் உள்ளது. பெரும்பாலான டிஜிட்டல் ரோல்களில் ஏஐ பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு துறைகளில் 90% க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜெனரேட்டிவ் AI கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில் 70 சதவீத IT நிறுவனங்களும் 50 சதவீத வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு (BFSI) நிறுவனங்களும் ஏஐ அடிப்படையிலான ஆட்சேர்ப்பு முறைகளை (ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடர்பானவற்றில் ஏஐ பயன்பாடு)ஏற்று கொண்டுள்ளன. இந்த ஆண்டு டிஜிட்டல் வளர்ச்சியில் Tier 2, Tier 3 நகரங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

பெண்களுக்கான வேலைவாய்ப்பு என்பது அதிகரித்துள்ளது. ஆண்களுக்கான வேலைவாய்ப்பு திறன் 51.3 சதவீதம் என்று உள்ளது. தற்போது ஆண்களை பின்னுக்கு தள்ளி பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளனர். பெண்களின் வேலைவாய்ப்பு 54 சதவீதமாக உள்ளது. இது முதல் முறையாக நடந்துள்ளது. இதற்கு ஹைபிரிட் மாடல் பணி மற்றும் ஆன்லைனில் பல்வேறு விஷயங்களை கற்கும் வாய்ப்பு இருப்பது தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

2026-27 நிதியாண்டிற்கான பணி நியமனம் என்பது 40 சதவீதமாக உள்ளது, இது முந்தைய ஆண்டில் 29 சதவீதமாக இருந்தது. இந்த உயர்வுக்கு தொழில்நுட்பம், உற்பத்தி உள்ளிட்டவை தான் முக்கிய காரணம். பேங்கிங், நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டு துறைகளில் மட்டும் 2030ம் ஆண்டில் புதிதாக 2.5 லட்சம் வேலைகள் உருவாகலாம். ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.7 சதவீதமாக இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டில் கிக் மற்றும் ஃப்ரீலான்ஸ் பணியாளர்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றனர். 2030ம் ஆண்டில் 23.5 மில்லியனை (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) எட்டும். வேலைவாய்ப்பு விளைவுகளை வலுப்படுத்துவதில் கல்வி மற்றும் கொள்கை முன்முயற்சிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 10, பிளஸ் 2 மற்றும் கல்லூரி தேர்வுகளின் முடிவுகளில் பெண்கள் தான் ஆண்களை விட அதிகமாக தேர்ச்சி அடைந்து வருகின்றனர். ஆனால் பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது. இப்படியான சூழலில் தான் வேலைவாய்ப்பிலும், ஆண்களை பின்னுக்கு தள்ளி பெண்கள் முன்னேற்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+