Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை.. 81 ஆயிரம் வரை சம்பளம்.. 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுருக்கெழுத்தர் நிலை, வரி உதவியாளர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 18 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறையானது, வரி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் வருமானத்துறையின் அலுவலகங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உள்ளன.

Income Tax Department Announces Recruitment for Various Vacancies salary up to 81 thousand

தமிழ்நாட்டிலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அலுவலகம் உள்ளது. வருமான வரித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிட விவரம்:

* சுருக்கெழுத்தர் நிலை-II (Stenographer Grade-II) - 12 இடங்கள்,
* வரி உதவியாளர் (Tax Assistant) - 47 இடங்கள்
* பன்முகப் பணியாளர் (Multi-Tasking Staff - MTS) - 38 இடங்கள்

விளையாட்டு அடிப்படையிலான காலிப்பணியிடங்கள் விவரங்கள் பின்வருமாறு: தடகளம் - 26, நீச்சல் - 06, பேட்மிண்டன் - 04, டேபிள் டென்னிஸ் - 04, செஸ் - 04, லான் டென்னிஸ் - 04, கிரிக்கெட் - 10. மேலும், கூடைப்பந்து - 04, கைப்பந்து - 05, கபடி - 07, கால்பந்து - 11, பில்லியர்ட்ஸ் - 02, ஸ்குவாஷ் - 02, யோகாசனம் - 02, பாரா விளையாட்டு (காது கேளாதோர் விளையாட்டு உட்பட) - 04, குத்துச்சண்டை - 02 என பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளுக்கும் பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி

* சுருக்கெழுத்தர் நிலை-II பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* வரி உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* பன்முகப் பணியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி போதுமானது.

விளையாட்டுத் தகுதி கொண்ட பணிக்கு, ஜூலை 01, 2026 அன்று வரையிலான விளையாட்டுச் சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

வயது வரம்பு:

* வயது வரம்பை பொருத்தவரை, ஜனவரி 31, 2026 தேதிப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
* சுருக்கெழுத்தர் மற்றும் வரி உதவியாளர் பதவிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* பன்முகப் பணியாளர் பதவிக்கு 18 முதல் 25 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?

* சுருக்கெழுத்தர் நிலை-II - ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்
* வரி உதவியாளர் - ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்
* பன்முகப் பணியாளர் - ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை, விண்ணப்பக் கட்டணம்:

தேர்வு முறையை பொறுத்தவரை தகுதிப் பட்டியல், விளையாட்டுத் தகுதி, திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு படி தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometaxmumbai.gov.in/ சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2026 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.incometaxmumbai.gov.in/wp-content/uploads/2026/01/Sports-Recruitment-Notification.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+