8ம் வகுப்பு போதும்.. எழுத்து தேர்வு இல்லை.. ரூ.1.41 லட்சம் வரை சம்பளம்! ஐடியில் சூப்பர் வேலை
சென்னை: வருமான வரித்துறையில் தேர்வு இன்றி 5 பிரிவுகளில் 231 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 400 வரை சம்பளம் கிடைக்கும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை செயல்பட்டு வருகிறது. மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் இந்த வருமான வரித்துறை இந்தியாவில் உள்ள முக்கிய மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றாகும்.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் வருமான வரி செலுத்துவதை உறுதி செய்வது, வருமான வரித்துறை செலுத்தாதவர்களின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தி அபராதம் விதிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: வருமான வரித்துறை ஆய்வாளர் (Inspector Of Income Tax) பணிக்கு 14 பேர், வரி உதவியாளர் (Tax Assistant) பணிக்கு 119 பேர், ஸ்டெனோகிராபர் கிரேட் II (Stenographer Gr.II) பணிக்கு 18 பேர், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff) பணிக்கு 137 பேர், கேன்டீன் அட்டென்டென்ட் (Cateen Attendant) பணிக்கு 3 பேர் என மொத்தம் 231 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: வருமான வரித்துறை ஆய்வாளர் பணிக்கு 30 வயதுக்குள்ளும், வரி உதவியாளர் பணிக்கு 27 வயதுக்குள்ளும், ஸ்டெனோகிராபர் கிரேட் II, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப், கேன்டீன் அட்டென்டென்ட் பணிக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: வருமான வரித்துறை ஆய்வாளர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 400 வரை சமப்ளம் வழங்கப்படும். வரி உதவியாளர், ஸ்டெனோகிராபர் கிரேட் II பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் கிடைக்கும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப், கேன்டீன் அட்டென்டென்ட் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
கல்வி தகுதி: வருமான வரித்துறை ஆய்வாளர் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். வரி உதவியாளர் பணிக்கு டிகிரி முடித்து இருப்பதோடு டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் கிரேட் II பணிக்கு 12ம் வகுப்பு முடித்து டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். அதோடு மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப், கேன்டீன் அட்டென்டென்ட் பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை
முடித்திருக்க வேண்டும்.
மேலும் இந்த பணி என்பது விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கானது. இதனால் மேற்கூறிய கல்வித்தகுதியுடன் கூடியவர்கள் இந்தியா, மாநிலம், பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும். எந்தெந்த பிரிவில் விளையாடி இருக்க வேண்டும் என்ற பட்டியல் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றம் விருப்பம் உள்ளவர்கள் www.incometaxmumbai.gov.in எனும் இணையதளம் மூலம் ஜனவரி 19ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படி விண்ணப்பம் செய்வோர் அவர்களின் விளையாட்டு சார்ந்த ட்ரீல், உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications