10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. ரூ.63,200 வரை சம்பளம்.. தபால் துறையில் தமிழகத்திலேயே பணி.. ரெடியா?
சென்னை: இந்திய தபால் துறையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்திய தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் தபால் துறையின் தமிழ்நாடு சர்க்கிளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
இந்திய தபால் துறையில் தமிழ்நாடு சர்க்கிளில் காலியாக உள்ள 58 டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சென்னை சிட்டி மண்டலத்தில் 6, சென்ட்ரல் மண்டலத்தில் 9, எம்எம்எஸ் சென்னை மண்டலத்தில் 25, தெற்கு மண்டலத்தில் 3, மேற்கு மண்டலத்தில் 15 என மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் லைட் மற்றும் ஹெவி மோட்டார் வாகனத்துக்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். மேலும் டிரைவராக 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவவீரர்களுக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வரையும் வயது தளர்வு உண்டு. வயது வரம்பு என்பது 2023 மார்ச் 31ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாதசம்பளம் என்ன?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் tamilnadupost.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தபால்களை The Senior Manager (JAG), Mail Motor Service, No-37, Greams Road, Chennai 600006 என்ற முகவரிக்கு மார்ச் 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications