போஸ்ட் ஆபிஸ் வேலை.. மெரிட் லிஸ்ட் பார்த்துட்டீங்களா? பெயர் இருக்குறவங்க அடுத்து என்ன செய்யனும்
சென்னை: மத்திய தகவல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போஸ்ட் ஆபிசில் 21,413 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு பலரும் விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது மெரிட் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எப்படி பார்க்க வேண்டும் என்றும், பெயர் இருப்பவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்கு பார்க்கலாம்.
மத்திய தகவல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையில் நாடு முழுவதும் போஸ்ட் ஆபிஸ், கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு எதுவும் இன்றி பத்தாம் வகுப்பு மார்க் வைத்து இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதனால், தேர்வர்கள் மத்தியில் அஞ்சல் துறை வெளியிடும் இந்த அறிவிப்புக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த வகையில், 21,413 காலிப்பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 3 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தமிழகத்தில் மட்டும், 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
சம்பளம் எவ்வளவு:
* பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பணிக்கு மாதம் ரூ.12,000/- to ரூ.29,380/- வரை வழங்கப்படும்.
* உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ABPM / Dak Sevak - பணிக்கு ரூ.10,000/- முதல் ரூ..24,470/-வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கடந்த 21 ஆம் தேதி மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. 22 மாநிலங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், முடிவுகளை அஞ்சல் அலுவலக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி தெரிந்துகொள்வது?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,291 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அஞ்சல்துறை வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களா? என்ற விவரத்தை indiapostgdsonline.gov.in. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, வடகிழக்கு, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 22 மாநிலங்களில் தேர்வு ஆனவர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
லிஸ்டில் பெயர் உள்ளதா?
indiapostgdsonline.gov.in. என்ற இணையதளத்தில் சென்று GDS merit list link- என்ற பக்கத்தில் சென்று தேர்வு செய்யப்பட்டவர்களின் லிஸ்டில் பெயர் உள்ளதா? என தெரிந்து கொள்ளலாம். தேர்வு பட்டியலை டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு எதிர்கால பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்வது அவசியம்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறை:
மெரிட் லிஸ்டில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அதாவது தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட டிவிஷன் அல்லது யூனிட் அலுவலகத்தில் உள்ள டிவிஷன் தலைமை அதிகாரியிடம் ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு முன்பாக நேரில் சென்று சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். அசல் சான்றிதழுடன் சுய சான்று அளிக்கப்பட்ட இரண்டு செட் சான்றிதழ் நகல்களுடன் செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications