தபால் துறையில் வேலைவாய்ப்பு.. அழைக்கும் போஸ்ட் ஆஃபிஸ் வங்கி.. தமிழகத்திலேயே பணி!
சென்னை: தபால்துறையின் கீழ் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காலியாக இருக்கும் எக்ஸிக்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இந்த தபால் துறையின் ஒரு அங்கமாக ஐபிபிபி (IPPB) எனும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் (India Post Payments Bank Limited) உள்ளது.

இந்த ஐபிபிபிக்கு நாடு முழுவதும் மொத்தம் 650 பேங்கிங் அவுட்லெட் என்பது உள்ளது. இந்நிலையில் தான் ஐபிபிபியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனத்தில் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 344 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் மொத்தம் 35 மாநிலங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் 12, அண்டை மாநிலங்களான தெலுங்கானாவில் 15 பேர், கேரளாவில் 4 பேர், கர்நாடகாவில் 20 பேர், ஆந்திராவில் 8 பேர், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு தபால் துறையில் ஜிடிஎஸ் (GDS) எனும் கிராமின் டேக் சேவாக் பிரிவில் 2 ஆண்டு பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். தேர்வாகும் நபர்கள் ஓராண்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள். அதன்பிறகு தேவை என்றால் பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும். பணி நீட்டிப்பு என்பது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] மூலம் தீர்த்து கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications