கைநிறைய சம்பளம்.. 10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. தபால் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு! ரெடியா?
சென்னை: இந்திய தபால்துறையில் காலியாக உள்ள டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி, டிப்ளமோ, 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்கத்தின் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
இந்திய தபால் துறையில் தற்போது டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 22 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.
மேலும் விண்ணப்பத்தாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர 10ம் வகுப்பு பாஸ் செய்து இருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களை பழுதுபார்த்தல், பராமரித்தல் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவர்களும் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் செய்வோர் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் ‛‛The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Indistrial Area Phase - I, Naraina, New Delhi - 110028'' என்ற முகவரிக்கு செப்டம்பர் மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்குள் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோரில் Competitive Trade Test மூலம் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் பணிக்கு தேர்வாகும் நபர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்பட உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications