‛‛தபால் துறையில் வேலை’’.. 10ம் வகுப்பு போதும்.. ரூ.63,200 வரை மாதசம்பளம்! வந்தாச்சு அறிவிப்பு
பெங்களூர்: தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்து டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் + அலோவன்ஸ் வழங்கப்பட உள்ளது.
மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:

காலியிடங்கள்: தபால் துறையில் தற்போது ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு 27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி பெங்களூரில் 15 பேர், மைசூரில் 3 பேர் பணியமர்த்தப்படுவார்கள். மற்றவர்கள் சிக்கோடு, கலபுரி, ஹாவேரி, கார்வார், மண்டியா, புத்தூர், சிவமொக்கா, உடுப்பி, கோலார் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். மேலும் மற்றவர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
கல்வி தகுதி: இந்த பணியை பெற விரும்புவோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதோடு மோட்டார் வாகனம் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும். மேலும் ஹோம்ஹார்ட் மற்றும் சிவில் வாலண்டியர்ஸ்ஸாக 3 ஆண்டு பணியாற்றியவர்கள் என்றால் இன்னும் சிறப்பு என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர ஏற்கக்கூடிய வகையிலான அலோவன்ஸ் தொகையும் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.inidapost.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛The Manager, Mail Motor Service, Bengaluru - 560 001 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் மே மாதம் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.
இப்படி அனுப்பும்போது அந்த விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ள கவரின் மேல்புறத்தில் ‛‛Applicaton for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Bengaluru'' என கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் தவிர பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications