Join Indian Army: இந்திய ராணுவத்தில் சேர்வது உங்க ஆசையா? இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: இந்திய ராணுவத்தில் இணைந்து பணிபுரிய தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்படுகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ராணுவ ஆட்சேர்ப்பு மையங்கள் மூலம் தேர்வுகள் நடைபெற இருக்கும் நிலையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்ற இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," ராணுவத்தின் ஆட்சேர்ப்பு அலுவலக சென்னை தலைமையகம் சார்பில் இந்த அறிவிக்கை www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தமிழ்நாட்டில் கடலூர். வேலூர், திருப்பத்தூர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை. திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள, புதுவை யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர் தங்கள் விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தின் மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
அக்னிவீர் பொதுப் பணி, அக்னிவீர் தொழில்நுட்பம். அக்னிவீர் எழுத்தர்/ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8 ஆம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்னிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வர்கள், அக்னிவீர் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத்தகுதித்தேர்வு ஆன்லைன் முறையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ மு டித்தவர்கள் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இதில் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு மார்ச் 12. 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 10, 2025 அன்று முடிவடையும். ஜூன் 2025-ல் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும். அவற்றைப் பெற விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தையும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலையும் தொடர்ந்து பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) (அஞ்சல் குறியீடு- 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
ஆட்சேர்ப்பு நடைமுறை முழுமையாக தானியங்கி முறையில், நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் நடைபெறுகிறது. ஏதேனும் நபர்கள் விண்ணப்பதாரர்களை அணுகி அவர்களை தேர்ச்சி பெற அல்லது பணியில் சேர உதவ முடியுமென்று கூறினால், அது மோசடியாகும். அத்தகைய நபர்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. சொந்த கடின உழைப்பு மற்றும் போட்டி தேர்வுக்கு முறையாக தயாராதல் மட்டுமே அவர்களின் தேர்வை உறுதி செய்யும். இதில் இடைத்தரகர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அத்தகைய இடைத்தரகர்கள், முகவர்கள் அல்லது முகமைகளால் பணி நாடுநர்கள் ஈர்க்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications