Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 350 பணியிடங்கள்.. பிஇ முடித்தவங்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பிடி, பிடெக், எம்சிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.48 ஆயிரம் முதல் ரூ.1.05 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

இந்தியன் வங்கி நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. சுமார் 6,000 கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் பல ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

Indian Bank SO Recruitment 2026 350 Vacancies for BE BTech amp amp MCA Graduates

பணியிடங்கள் விவரம்:

தற்போது இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள் (Specialist Officers - SO) பிரிவில் காலியாக உள்ள 350 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலாளர் பிரிவில், தகவல் பாதுகாப்பு (03), டேட்டாபேஸ் நிர்வாகி (05), நெட்வொர்க் செயல்பாடுகள் (03), அப்ளிகேஷன் டெவலப்பர் (03) டேட்டா அனலிஸ்ட் (03) எனப் பல தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

சீனியர் மேலாளர் பிரிவில், கடன் (20), நிதி (20), நிதி ஆய்வாளர் (10), மாடல் வேலிடேட்டர் (04), ஃபாரெக்ஸ் டீலர் (Cross-Currency) (01) பணியிடங்களும், உதவி மேலாளர் (அளவு I) பிரிவில், உதவி மேலாளர் -பாதுகாப்பு (Assistant Manager-Security) - 10 பதவிகள், உதவி மேலாளர்-சிவில் இன்ஜினியர் (Assistant Manager-Civil Engineer) - 04 பணியிடங்கள் என மொத்தம் 350 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி மற்றும் அனுபவம்:

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, பிடி, பிடெக், எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்பை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில ஐ.டி. சார்ந்த பதவிகளுக்கு VMware, CISSP, Oracle Certified Associate, CCNA போன்ற குறிப்பிட்ட சான்றிதழ் படிப்புகளும் தகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பதவிகளுக்கு ஒரு வருட அனுபவமும், உதவி மேலாளர் (அளவு I) சிவில் இன்ஜினியர் பதவிகளுக்கு ஒரு வருட அனுபவமும், பாதுகாப்பு மேலாளர் பதவிக்கு ஐந்து வருட அனுபவமும் தேவை.

வயது வரம்பு

* வயது வரம்பை பொறுத்தவரை 28.04.2026 அன்று நிலவரப்படி கணக்கில் கொள்ளப்படும். இதன்படி, மேலாளர் (அளவு II) பதவிகளுக்கு குறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்க வேண்டும்.
* சீனியர் மேலாளர் (அளவு III) பதவிகளுக்கு பொதுவாக குறைந்தபட்சம் 25 முதல் 27 வயது வரையும், அதிகபட்சம் 35 முதல் 37 வயது வரையும் வயது வரம்பு உள்ளது.

* உதவி மேலாளர் (அளவு I) பதவிகளுக்கு குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை (பாதுகாப்புப் பதவிக்கு) வயது வரம்புகள் உள்ளன. * உதவி மேலாளர்-சிவில் இன்ஜினியர் மற்றும் ஆர்கிடெக்ட் பதவிகளுக்கு முறையே 22-32 மற்றும் 24-34 வயது வரம்புகள் உள்ளன.
* SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், பொதுப்பிரிவு/ EWS மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 ஆண்டுகள் என அரசு கொள்கைகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு:

* உதவி மேலாளர் (Scale I) - ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை
* மேலாளர் (Scale II) - ரூ.64,820/- முதல் ரூ.93,960/- வரை
* சீனியர் மேலாளர் (Scale III) - ரூ.85,920/- முதல் ரூ.1,05,280/- வரை

தேர்வு முறை:

ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ₹175/-. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ₹1,000/-. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://indianbank.bank.in/ உள்ள 'Careers' பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு 2026 ஏப்ரல் 08 அன்று தொடங்கி, 2026 ஏப்ரல் 28 அன்று முடிவடையும். பிற விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு அறிவிப்பு: https://indianbank.bank.in/wp-content/uploads/2026/04/Advertisment-Notice.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+