கடலோர காவல் படையில் வேலை.. சென்னையில் பணியிடம்! பத்தாம் வகுப்பு தகுதி தான்.. செம சான்ஸ்
சென்னை: இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான கல்வி தகுதி, அனுபவம் குறித்த விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் ஒரு பாதுகாப்பு பிரிவாக இந்திய கடலோர காவல்படை உள்ளது. நாட்டின் கடல்வளங்களை பாதுகாக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது. கடலோர பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் மிக முக்கிய பாதுகாப்பு அமைப்பாக கடலோர பாதுகாப்பு படை செயல்படுகிறது. கடலோர பாதுகாப்பு படையில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 14 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஸ்டோர் கீப்பர் கிரேடு-II - 01
எஞ்சின் டிரைவர் - 03
லாஸ்கர் Lascar - 02
சிவில் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் - 03
பியூன், GO (கெஸ்ட்னர் ஆபரேட்டர்) - 04
வெல்டர் - 01
என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
* ஸ்டோர் கீப்பர் பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும். அத்துடன் அரசு பொதுத்துறை அல்லது அரசு அமைப்புகளில் ஸ்டோர் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் அவசியம்.
* என்ஜின் டிரைவர் - பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
* லாஸ்கர் - பணிக்கு 10 ஆம் வகுப்பு + மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
* சிவிலியன் மோட்டோர் டிரன்ஸ்போர்ட் டிரைவர்: ஹெவி வாகனங்கள் இயக்கும் லைசன்ஸ் அவசியம். இரண்டுஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
* பியூன்: பத்தாம் வகுப்பு தகுதியுடன் அரசு அலுவலகங்களில் ஆஃபிஸ் அட்டண்டண்ட் ஆக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஸ்டோர் கீப்பர் கிரேடு-II - 18 முதல் 25 வயது வரை
இன்ஜின் டிரைவர் - 18 முதல் 30 வயது வரை
லாஸ்கர் - 18 முதல் 30 வயது வரை
சிவில் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (சாதாரண கிரேடு) - 18 முதல் 27 வயது வரை
பியூன், GO (கெஸ்ட்னர் ஆபரேட்டர்) - 18 முதல் 27 வயது வரை
வெல்டர் (அரை திறமையானவர்) - 18 முதல் 27 வயது வரை
சம்பளம் எவ்வளவு?
பணியிடங்களுக்கு தகுந்தபடி சம்பளம் மாறுபடும். அதிகபட்சமாக என்ஜின் டிரைவர் பணிக்கு ரூ.25 ஆயிரம் முதல் 81,100-வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்கள் தபால் வழியாக அனுப்ப வேண்டும். தேர்வு அறிவிப்பினை நன்கு ஒருமுறை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி; The Commander Coast Guard Region (East) Near Napier Bridge Fort St George (PO) Chennai-600 009. விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் அஞ்சல் உறையில் தெளிவாக குறிப்பிடுவது அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள்; 29.12.2025
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications