மாதஊதியம் ரூ.20,000 டூ ரூ.1.77 லட்சம்.. கொடைக்கானல், திருப்பத்தூரிலேயே அரசு பணி! அழைக்கும் ஐஐஏபி!
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் தமிழ்நாட்டின் கொடைக்கானல் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் காவலூரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டில் இந்திய வானியற்பியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் கிளைகளாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் காவலூரில் உள்ள இந்திய வானியற்பியல் மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்திய வானியற்பியல் நிறுவனம் (Indian Institute of Astrophysics) செயல்பட்டு வருகிறது. இங்கு வானியல் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் சோலார் அப்சர்வேட்டரி மையம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள காவலூரில் வைனு பாப்பு ஆய்வு கூடமும் இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
இந்நிலையில் தான் தமிழ்நாடு உள்ள இந்த மையங்கள் மற்றும் கர்நாடகாவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. என்ஜினீயர் பி மற்றும் எலக்ட்ரீசியன் ஏ, ஹார்டிகல்சர் அசிஎஸ்டென்ட் பிரிவில் தலா ஒன்று, மெக்கானிக் ஏ பிரிவில் 2, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் ரீசர்ஜ் அசிஸ்டென்ட் பிரிவில் தலா 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், இளங்கலை பட்டபடிப்பில் ஐடி, பிசிஏ, இயற்பியல், வேதியியல், கணிதம், தோட்டக்கலை படிப்பை முடித்தவர்கள், டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஐடிஐ ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு என்ன?
என்ஜினீயர் பி பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற அனைத்து பணிகளுக்கும் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 15 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் என்ன?
என்ஜினீயர் பி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வரையும், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஜூனியர் ரீசர்ஜ் அசிஸ்டென்ட் மற்றும் ஹார்டிகல்சர் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. மெக்கானிக் ஏ பிரிவு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63 ஆயிரத்து 200 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.iiap.res.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பிப்ரவரி 20ம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆன்லையனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு அல்லது திறனறி தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications