உதகையில் வேலைவாய்ப்பு.. மாத சம்பளம் ரூ.92,000.. அழைக்கும் இந்திய மண்-நீர் பாதுகாப்பு நிறுவனம்!
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 19 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.29,200 முதல் ரூ92,300 வரை சம்பளம் வழங்கப்பட உள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையிலும் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் (ICAR-IISWC)1950ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் துவங்கப்பட்டது. மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம் அளித்து வருகிறது.
தற்போது இந்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்(ICAR) கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதற்கு இந்தியாவின் பல இடங்களில் இதுதொடர்பான கிளைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் உதகையில்...
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ளது. இதுதவிர அண்டை மாநிலமான கர்நாடகாவில் பல்லாரி மாவட்டத்திலும், குஜராத்தில் ஆனந்த் பகுதி உள்பட வெவ்வேறு இடங்களில் இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காலியிடங்கள் எவ்வளவு?
இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் நீலகிரி மாவட்டம் உதகையில் மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டிலும் பணி செய்யும் வாய்ப்பை பெறலாம்.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.29 ஆயிரத்து 200 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.92,300 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் 3 பிரிவில் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.cswcrtiweb.org/ இணையதளம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிப்ரவரி 23ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை [email protected] அல்லது [email protected] ஆகிய முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications