Indian Railway Job: இந்தியன் ரயில்வேயில் வேலை.. 3,996 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்கள்.. ஆர்ஆர்பி புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ரயில்வே துறையில் (Indian Railway Job) காலியாக இருக்கக் கூடிய ஜூனியர் என்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. டிப்ளமோ, பிஎஸ்சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படும்.

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. ரயில்வே நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்துவிட என்ற ஆர்வத்தில் லட்சக்கணக்கான தேர்வ்ர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில்தான், ரயில்வேயில் ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Indian Railway Job Indian Railway rrb job railway job employment

பணியிடங்கள் விவரம்:

ஜூனியர் என்ஜினியர், டெப்போ மெட்டிரியல் சூப்பிரண்டண்ட் மற்றும் கெமிக்கல்& உலோகவியல் அசிஸ்டண்ட் என மொத்தம் 3,996 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் இ.எம்.யூ & டி.ஆர்.எஸ், சிவில், டிரக் மெஷின், மெக்கானிக்கல், டீசல் மெக்கானிக்கல், வெல்டர், டீசல் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணியிடங்களுக்கு பிஎஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும். இதுபற்றிய விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்துக்கொள்ளலாம்.

வயது வரம்பு:

18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி / எஸ்டி பிரிவினர் என்றால் 38 வயது வரையும், ஓபிசி பிரிவினர் 36 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு:

ஜூனியர் என்ஜினியர் லெவல் - 6: ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட கணிணி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 250 கட்டணம் ஆகும்.

தேர்வு எழுதிய பிறகு 500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400ம், எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருகு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 13.09.2026 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.rrbapply.gov.in/#/auth/landing

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+