இந்தியன் ரயில்வேயில் வேலை.. 6,180 பணியிடங்கள்.. வந்தது மெகா அறிவிப்பு.. என்ஜினியரிங் முடிச்சிருக்கீங்களா? விட்றாதீங்க
மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் 6,180 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 92 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே உள்ளது. தனி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வேயில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மத்திய அரசு ஊதிய விதிமுறைகளின் படி ரயில்வே ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதனால், ரயில்வே பணியில் சேர வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவாக உள்ளது.

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் ஆர்.ஆர்.பி அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது, 6,180 டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டெக்னிஷியன் கிரேடு 1 - 180
டென்க்ஷியன் III - 6000
என மொத்தம் 6,180 பணியிடங்கள் நிரப்பப்டுகின்றன.
கல்வித் தகுதி:
டெக்னிஷியன் கிரேடு 1 சிக்னல் - பணியிடத்திற்கு இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி அல்லது இந்த பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய ஏதேனும் ஒரு பி.எஸ்.சி டிகிரி அல்லது மேற்கூறிய பாடப்பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டெக்னிஷியன் கிரேடு III - பணிக்கு மெட்ரிகுலேஷன், எஸ்.எஸ்.எல்.சி / ஐடிஐ / அப்ரெண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
* டெக்னிஷியன் கிரேடு 1 - 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
* டெக்னிஷியன் கிரேடு III - 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் சலுகைக்ள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகைகள் அளிக்கப்படும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் சலுகைகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
* டெக்னிஷியன் கிரேடு 1 பணிக்கு மாதம் ரூ. 29,200 to ரூ. 92,300 வரை சம்பளம் கிடைக்கும்.
* டெக்னிஷியன் கிரேடு III - பணிக்கு மாதம் ரூ. 19,900 to ரூ. 63,200 வரை சம்பளம் கிடைக்கும்.
தேர்வு முறை:
கணிணி வழியிலான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.
எஸ்சி / எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டனம் செலுத்தினால போதும், தேர்வு எழுதிய பிறகு முழு தொகையும் திருப்பி தரப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://www.rrbapply.gov.in/) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 28.06.205 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.07.2025 ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அப்டேட் செய்யப்படும். தேர்வர்கள் https://www.rrbchennai.gov.in/- என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications