இந்தியன் ரயில்வேயில் 4,098 பணியிடங்கள்.. ஆரம்பமே 35 ஆயிரம் சம்பளம்.. ஆர்ஆர்பி வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு (Indian Railways job) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4,098 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.35 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களின் தன்மைக்கேற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஜூனியர் என்ஜினியரிங் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்
இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர் மற்றும் கெமிக்கல் மற்றும் உலோகவியல் உதவியாளர் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 4098 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் வொர்க்ஷாப், டிரக் மெஷின், டீசல் மெக்கானிக்கல், வெல்டர், சிவில், மெக்கானிக்கல், வெல்டர், டீசல் எலக்ட்ரிக்கல், மெட்டீரியல் சூப்பிரண்டண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ, பிஎஸ்சி பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
ஜூனியர் என்ஜினியர் - 18 வயது முதல் 33 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டெபோட் மெட்ரியல் சூப்பிரண்டண்ட் - 18 முதல் 33 வரை
கெமிக்கல்& உலோகவியல் (Metallurgical) உதவியாளர் - 18 வயது 33 வயது வரை
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
மத்திய அரசின் ஊதிய கமிஷன் லெவல் 6 படி மாதம் ரூ.35,400 ஆரம்ப சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட கணினி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி/எஸ்டி, பெண்கள், EBC பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். தேர்வு எழுதிய பிறகு முழுக்கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 500 கட்டணம் ஆகும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி தரப்படும். ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். வரும் 14.08.2026 முதல் விண்ணப்பிக்க அவகாசம் தொடங்குகிறது. விண்ணப்பிக்க வரும் 13.09.2026 கடைசி நாளாகும்.
அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: rrbapply.gov.in


Click it and Unblock the Notifications
