10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தாலே போதும்.. மாதசம்பளம் ரூ.63,200.. சூப்பர் வேலை..அழைக்கும் ஐஜிஎன்ஓயூ
டெல்லி: இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (Indira Gandhi National Open University) இயங்கி வருகிறது. இங்கு காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் கம் டைப்பிஸ்ட் பிரிவில் மொத்தம் 200 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வோர் 10 அல்லது 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு ஒரு நிமிடத்துக்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தைகளும், இநு்தி என்றால் 35 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 வழங்கப்படும். அதிகபட்சமாக மாதம் ரூ.63,200 வரை வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 31.03.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் ஓபிசி பிரிவினருக்கு 3 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதுக்குள்ளும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 10 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினரின் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிடபிள்யூபிடி பிரிவினருக்கு விண்ணப்பம் கட்டணம் கிடையாது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் ignou.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் கம்யூட்டர் பேஸ்ட்டு தேர்வு, திறனறி தேர்வு/டைப்பிங் டெஸ்ட், நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்பம் செய்ய Click Here
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications