HR ஆக ஆசையா?.. சென்னை ஐடி நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. இன்று முதல் மார்ச் 14 வரை இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து HR Recruiter பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ இன்று முதல் மார்ச் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னையில் Infiniti Software Solutions எனும் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஐடி சர்வீஸ் மற்றும் ஐடி கன்சல்டிங் வகை நிறுவனமாகும்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இயங்கி வரும் நிறுவனத்தில் தற்போது HR Recruiter பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கு குறிப்பிட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சமாக 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஐடி மற்றும் Non IT பிரிவில் பணியாற்றிய அனுபவம் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை கொண்டிருக்க வேண்டும். Negotiation திறமை இருக்க வேண்டும்.
ஜாப் போர்ட்டல், சோசியல் மீடியா வேலைவாய்ப்பு குறித்த விபரங்களில் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும். இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. Copetitive Salary என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நல்ல சம்பளம் கிடைக்கலாம். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது இன்று (மார்ச் 11) முதல் மார்ச் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Infiniti Software Solutions, 1st Floor, Murugesan Naicker Complex, Greams Rd, Thousand Lights, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] என்ற முகவரியை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications