சென்னையில் ஐடி வேலை.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு.. செப்டம்பர் 19, 20 தேதிகளில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இன்போசிஸ் நிறுவனம் உலகின் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பிபிஎம் (Infosys BPM Limited) சார்பில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் பிபிஎம் நிறுவனத்தில்‛கோர் ஜாவா' (Core Java) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி பற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:
இன்போசிஸ் பிபிஎம் நிறுவனத்தில் ‛கோர் ஜாவா' பணிக்கு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு 2 முதல் 4 ஆண்டு ப்ராஜெக்ட் அனுபவம் இருக்க வேண்டும். இந்த அனுபவத்தில் பெஞ்ச் பிரியட், டிரெய்னிங் மற்றும் இன்டன்ஷிப் காலம் சேர்த்து கொள்ளப்படாது.
மேலும் ஜாவா பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஜாவா பற்றிய அடிப்படைகள், ஓஓபி கான்செப்ட்கள் தெரிந்திருக்க வேண்டும். ஜாவா ப்ரேம்வொர்க்ஸ்களான Spring, Hibernate, Struts உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் இருப்பது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.
அதேபோல் எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட், வெப் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் தெரிந்திருந்தாலும் நல்லது. அதேபோல் டேட்டா பேசஸ் MySQL, PostgreSQl, Oracle உள்ளிட்டவற்றில் அனுபவம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்ப்பது, Debugging செய்வது உள்ளிட்ட திறமை இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான வார விடுமுறை என்பது Rotational அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கான இண்டவியூ என்பது செப்டம்பர் 19 (Only Diversity) மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Infosys BPM Limited, TP 1/1 Central Avenue Techno Park, SEZ, Mahindra World City, Paranur, Tamil Nadu 603002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://career.infosys.com/joblist என்பதை கிளிக் செய்து Register என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு ஐடி நம்பர் கிடைக்கும். அது இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த ஐடி நம்பர் இருந்தால் மட்டுமே இண்டர்வியூவில் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் இந்த பதிவு என்பது விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டாயமாகும்.
இண்டர்வியூ செல்வோர் ஐடி நம்பர், இ-மெயில் முகவரியுடன் வைத்திருக்க வேண்டும். 2 Resume(Hard Copy), ஒரிஜினல் ஐடி ப்ரூப், ஹெட்போன், ப்ளூடூத் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். அதேவேளையில் கேமரா, லேப்டாப் எடுத்து செல்லக்கூடாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்த சம்பளம் என்பது தேர்வாகும் நபர்களுக்கு இண்டர்வியூவின் போது தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications