சென்னையில் ஐடி வேலை.. பிசிஏ முதல் எம்எஸ்சி, எம்டெக் வரை படித்தவர்களுக்கு ஜாக்பாட்! அழைக்கும் Infosys
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஇ, பிடெக், பிசிஏ, எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
உலகின் பல்வேறு இடங்களில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுபற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:

இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது ஜாவா சாப்ட்வேர் டெவலப்பர் (Java Software Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ, பிடெக், பிசிஏ, எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்கபிரிங்க் புட் (Spring Boot), ஜாவா (Java) உள்ளிட்டவை நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் ஜாவா டெவலப்பர் ரோலில் குறைந்தபட்சம் 3 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், ஸ்ட்ராங் டெக்னிக்கல் ஸ்கில்ஸ், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தேவையென்றால் புதிய டெக்னாலஜியை கற்க ஆர்வமாக இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத சம்பளம் குறித்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படாததால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் தேவையான அளவுக்கு வேலை தேடுவோர் விண்ணப்பம் செய்தால் விண்ணப்பம் செய்வதற்கான லிங்க் காலாவதியாகிவிடும்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications