அனுபவம் வேண்டாம்.. ரூ.21 லட்சம் வரை சம்பளம்.. Infosys-யில் 4 பிரிவில் காலியிடங்கள்.. டிச.,25 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் 4 பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு குறைந்தபட்ச சம்பளமாக ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.21 லட்சம் சம்பளம் வரை வழங்கப்பட உள்ளது. இதுதவிர ஜாய்னிங் போனஸாக ரூ.75 லட்சம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு நம் நாட்டின் முக்கிய இடங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

it jobs job infosys

இந்நிலையில் தான் இன்போசிஸ் நிறுவனம் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (டிரெய்னி), ஸ்பெஷலிஸ்ட் புரோகிராம் எல் 1 (டிரெய்னி), ஸ்பெஷலிஸ்ட் புரோகிராம் எல் 2 (டிரெய்னி), ஸ்பெஷலிஸ்ட் புரோகிராம் எல் 3 (டிரெய்னி) என மொத்தம்4 பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (டிரெய்னி) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.25 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அதோடு ஜாயினிங் போனஸாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராம் எல் 1 (டிரெய்னி) பணிக்கு ஜாயினிங் போனஸாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஆண்டு சம்பளமாக ரூ.10 லட்சம் வரை கிடைக்கும். அதேபோல், ஸ்பெஷலிஸ்ட் புரோகிராம் எல் 2 (டிரெய்னி) பணிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.16 லட்சம் வரை கிடைக்கும். மேலும் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராம் எல் 3 (டிரெய்னி) பணிக்கு ஆண்டு சம்பளமாக ரூ.21 லட்சம் வரை கிடைக்கும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோருக்கு எந்த வகையான முன்அனுபவமும் வேண்டாம். மாறாக அவர்கள் பிஇ/பிடெக், எம்இ/எம்டெக், எம்சிஏ, எம்எஸ்சி (ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பும் அடங்கும்) படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் அனைவரும் 2015ம் ஆண்டில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி அனைவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டேட்டா சயின்ஸ்/ஏஐ/எம்எல், சைபர் செக்யூரிட்டி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் படிப்புகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவுகளை அலைட் முறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய டிசம்பர் 25ம்தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. அதேவேளையில் இன்போசிஸ் அல்லது இன்போசிஸின் ஒருபகுதியாக செயல்படும் இன்போசிஸ் பிபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் கடைசி 6 மாதத்தில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பில் பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பணிக்கான அறிவிப்பை காண Click Here

பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+