இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை நழுவ விடாதீங்க.. கைநிறைய சம்பளம்
சென்னை: பெங்களூரில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் Analyst/Data Analytics பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் பெங்களூர் இன்போசிஸில் அவ்வப்போது வெவ்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தேதி முடிவதற்குள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது Analyst/Data Analytics பணியிடங்கள் நிரப்பபப்பட உள்ளது. இந்த பணிக்கு 0 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது 2018, 2019, 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்களும், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, எம்டெக் படித்திருக்க வேண்டும்.
டெக்னீக்கல் ஸ்கீல்ஸ் அடிப்படையில் பார்த்தால் பைத்தான் டேட்டா என்ஜினீயரிங்கில் 3 முதல் 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்போர், AZURE-ல் பைத்தான் பைஸ்பார்க், பாண்டாஸ் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ETl, OLAP-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்க்யூஎல் பயன்படுத்தி ஆர்டிபிஎம்எஸ்ஸில் பணியாற்றும் திறமை இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்க குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி பார்த்தால் மாதம் குறைந்தபட்சம் ரூ.33 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.83 ஆயிரம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்தால் நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications