உளவுத்துறையில் வேலை.. ரூ.69 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு போதும்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள 677 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
உளவுத்துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 677 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்களை அறியலாம்.

பணியின் விவரம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 315 பணியிடங்களும், செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு 362 பணியிடங்களும் என மொத்தம் 677 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எழுத்துத்தேர்வு,நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த இரு பணியிடங்களுக்குமே 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். செக்யூரிட்டி / அஸ்சிஸ்டண்ட் டிரான்ஸ்போர்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். மோட்டோர் மெக்கானிசம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்சி ஆகும். விண்ணப்பிக்கும் மாநிலத்தில் குடியிருப்பதற்கான சான்று அவசியம்.
வயது வரம்பு; செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் பணிக்கு 18 வயது நிரம்பியவர்களும் 25 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?: செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 21,700 - 69,100 வரை சம்பளமாக வழங்கப்படும். மல்டி டாஸ்கிங் பணிக்கு ரூ. 18,000 - 56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 14.10.2023 முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 13.11.2023 ஆகும். விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர், ஒபிசி பிரிவினர் ஆகியோர் 500 செலுத்த வேண்டும். இதர பிரிவினர் ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு பற்றிய அறிவிப்பு உள்துறை அமைச்சக இணையதளத்தில் வரும் 14 ஆம் தேதிக்குள் வெளியாகும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications